உங்கள் வரவு நல் வரவாகுக!
“பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய
மாமலை பயந்த சாமரு மணியும்,
இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை,
ஒரு வழித் தோன்றியாங்கு – என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.”
– புறநானூறு: பாடல்: 218
பாடியவர்: கண்னகனார்.
பொருள்:
பொன்னும் முத்தும் பவளமும் மணியும் ஒன்றுக்கொன்று தொலைவிலே விளைந்தாலும் அவற்றை மாலையாகக் கோர்க்கின்ற போது நெருங்கி ஒன்றுக்கொன்று அழகூட்டுவது போல கற்றறிந்த சான்றோர் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் பக்கத்தில் இருப்பவர்களே!
உயர்திணைக்கு நல்வரவு!!