RSS

Monthly Archives: May 2013

Image

இலக்கிய சந்திப்பு – 12 –

இலக்கிய சந்திப்பு 12 - 26.5.13

கடந்த மாத இலக்கிய சந்திப்பு சிட்னியில் குளிர்காலம் ஆரம்பித்து விட்ட காரணத்தால் மூடிய மண்டபம் ஒன்றுக்கு இடம் மாற வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக இடம் பெற முடியாது போய் விட்டது. அதனால் ஒரு மாத காலம் பிற்போடப்பட்டிருந்த நம் இலக்கிய சந்திப்பு இம்மாதம் “yaarl Function Centre ஸ்தாபனத்தாரின்  ஆதரவோடு அவர்களின் நிகழ்வரங்கில் இடம் பெற இருக்கின்றது.

அவர்களுக்கு நன்றியினைக் கூறிக்கொள்ளும் அதே வேளை, இம் மாத நிகழ்வில் நம் உயர்திணை அமைப்புக்கான இலட்சினையினை நம் ஊரில் வசிக்கும் ஓவியக் கலைஞர் திரு.ஞானம் ஐயா அவர்கள் உருவாக்கித் தந்திருக்கிறார் என்ற தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் பெரு மகிழ்வெய்துகிறோம்.

அவை பற்றிய முக்கிய முடிவுகளும் இம்மாதம் எடுக்கப்பட இருப்பதால் உறுப்பினர்களையும் ஆர்வலர்களையும்  தவறாது சமூகமளிக்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

உங்கள் பிரசன்னம் அறிதலுக்கும் பகிர்தலுக்கும் வளர்தலுக்கும் அத்தியாவசியமானதாகும்.

இலக்கிய சந்திப்பு ; சிந்தனைகளின் சங்கமம்!

 
Leave a comment

Posted by on 18/05/2013 in Uncategorized