அழகிய இலக்கிய நெஞ்சங்களுக்கு,
மாதம் ஒன்று வழமை போல உருண்டோடி மாத இறுதியில் வந்து நிற்கிறது. நம் இலக்கிய சந்திப்புக்கான நாள் இதோ நெருங்கி நிற்கிறது.
இவ்வார இறுதியில் இலக்கிய நிகழ்வுகள் பல நிகழ ஏற்பாடாகி இருக்கிறது. நாடக விழாக்கள் இலக்கிய விழாக்கள், நூல் அறிமுகவிழாக்கள், பேச்சுக்கள் என வழமையை விட அதிக நிகழ்வுகள் இவ்வார இறுதியில் இங்கு நிகழ்கின்றன. சிறப்பாக கம்பன் விழா கோலாகலமாக அரங்கேற இருக்கிறது. கம்பவாரிதி இலங்கையி;ல் இருந்து வருகை தந்திருக்கிறார். நேர நெருக்கடி காரணமாக வார நாட்களிலும் அவரது நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.
இந் நிகழ்வின் நிமித்தம் விக்ரோரியா மாநிலத்தில் இருந்தும் நம் நம் நெடுந்தூரத்து இலக்கிய சந்திப்பின் அங்கத்தவர்களும் நம் முதல் வருட ஜீவநதி சஞ்சிகை விமர்சன அரங்கில் பங்குபற்றி நிகழ்ச்சியைச் சிறப்பித்தவர்களும் சகபதிவர்களும் இலக்கிய ஆர்வலர்களும் பேச்சாளர்களுமான திரு ஜெகேயும் கேதாவும் கம்பன் விழாவவில் கம்பரசம் தர வருகை தருகிறார்கள்.
ஆகையால் இம்மாத இலக்கிய சந்திப்பு நம் இலக்கிய சந்திப்பின் அங்கத்தவர்களைக் கெளரவிக்கும் முகமாகவும் இலக்கிய அழகுகளை காணும் முகமாகவும் கம்பரசத்தில் சங்கமிக்கிறது. அடுத்த மாதம் வழமைபோல மாத இறுதி ஞாயிறொன்றில் நம் இலக்கிய சந்திப்பு வழமை போல நடைபெறும்.