RSS

Monthly Archives: April 2014

ஞாயிறு மாலை இடம் பெற்ற சிட்னி உயர்திணை சந்திப்பு – தமிழ்முரசு அவுஸ்திரேலியாவில்: 7.4.14

ஞாயிறு மாலை இடம் பெற்ற சிட்னி உயர்திணை சந்திப்பு

வாழ்வனுபவங்களும்    வாசிப்பு   அனுபவங்களும்  சங்கமித்த     சிட்னி    உயர்திணை     சந்திப்பு.


Image

Imageசிட்னியில்    இயங்கும்    உயர்திணை    சந்திப்பு   அரங்கின்   மாத   இறுதியிலான    ஒன்று    கூடல்   கடந்த   ஞாயிற்றுக்கிழமை   30 ஆம்   திகதி மாலை    சிட்னி   பரமட்ட   பூங்காவில்   நடைபெற்றது. யசோதா  பத்மநாதன்   ஒழுங்குசெய்திருந்த   இச்சந்திப்பில் படைப்பு    இலக்கியத்தில்   வாழ்வனுபவங்கள்   என்ற   தலைப்பில் மெல்பனிலிருந்து   வருதைந்த  எழுத்தாளர்   முருகபூபதி  உரையாற்றினார்.

Image

இந்நிகழ்வில்     கலந்துகொண்ட   எழுத்தாளர்கள்  –  கலைஞர்கள் – ஊடகவியலாளர்கள்   மற்றும்   வாசகர்கள்   சுய அறிமுகவுரைகளை நிகழ்த்தியதையடுத்து  –  முருகபூபதி    உரையாற்றினார்.  தொடர்பாடல்கள்தான்    ஆரோக்கியமான   சமுதாயத்தை   வளர்க்கும் எனவும்    படைப்பாளிகளும்    ஊடகவியலாளர்களும்    தொடர்பாடல்களை மேற்கொள்வதன்    ஊடாகவே   வாசகர்களுக்கு   சமுதாயம்    பற்றிய பதிவுகளை     தரமுடியும்.     அந்தப்பதிவுகள்தான்    செய்திகளையும்  –  இலக்கியப்படைப்புகளையும்     உலகத்திற்கு    வரவாக்குகின்றன    என்றும் முருகபூபதி    தெரிவித்தார்.

பிரிஸ்பேர்ண்    தாய்த்தமிழ்ப்பள்ளி    நடத்திய    சிறுகதைப்போட்டியில் மூன்றாவது    பரிசுபெற்ற   வானொலி   ஊடகவியலாளர்    இரா. சத்தியநாதனின்     விண்ணைத்தாண்டி    வருவேனே   என்ற  சிறுகதையின்   வாசிப்பு    அனுபவப்பகிர்வு    நிகழ்ச்சியும்   இச்சந்திப்பில் இடம்பெற்றது.

Image

இலங்கையிலிருந்து   வருகைதந்திருந்த    எழுத்தாளர்   தாமரைச்செல்வி   –  கந்தசாமி     மற்றும்    பாஸ்கரன்  –    யசோதா பத்மநாதன்   –   முருகபூபதி ஆகியோர்    குறிப்பிட்ட    சிறுகதை      உண்மைச்சம்பவத்தை    பின்னணியாக வைத்து    எழுதப்பட்டிருப்பதனால்    அவுஸ்திரேலியா    தமிழ்   வாசகர்களுக்கு     புதிய களத்தை    அறிமுகப்படுத்துவதாக    குறிப்பிட்டனர். 
Image
பல   வருடங்களுக்கு   முன்னர்    இந்த நாட்டில்    நடந்த   ஒரு உண்மைச்சம்பவம்     தமிழ்ச்சிறுகதையாகியிருப்பதனால்    அதனை    எழுதிய அனுபவம்    தொடர்பாக     இரா.சத்தியநாதன்   தமது ஏற்புரையில் குறிப்பிட்டார்.இந்நிகழ்வில்    திருமதி    கார்த்திகா   கணேசர்  –    நடராஜா   கருணாகரன் – சுந்தரதாஸ்,  –    ஆரீஃப்  –    கௌரி  –   காணா. பிரபா,  –   பானுரேகா   –   ஸ்ரேயா  –  ரவீந்திரன்  –    சுந்தரச்செல்வன்     உட்பட   பலரும்   உரையாற்றினர்.பரமட்டா    பூங்காவில்   இனியதொரு    மாலைப்பொழுதில்    இலக்கிய வாசம் கமழ்ந்த    இச்சந்திப்பு   வாழ்வனுபவங்களையும்   வாசிப்பு   அனுபவங்களையும்   சங்கமிக்கச்செய்தது   பயனுள்ள  அனுபவமாக   அமைந்தது.

Image
                                                   —-0—–

 
Leave a comment

Posted by on 06/04/2014 in Uncategorized