RSS

Monthly Archives: July 2015

தனித்தமிழ் சிறுகதைப் போட்டி

img-hand_1294926c

தனித்தமிழ் இயக்கம் நடாத்தும் தனித்தமிழ் சிறுகதைப்போட்டி

கதைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் : 20.8.15

முகவரி: முனைவர்.க. தமிழ் மல்லன்,

தலைவர், தனித்தமிழ் இயக்கம்,

66, மாரியம்மன் கோயில் தெரு,

தட்டாஞ் சாவடி,

புதுச் சேரி- 605009.

தொலைபேசி:413-2247072.

நெறிமுறைகள்:

1.அ4 தாளில் 5 பக்கங்களைக் கொண்ட குமுகாயக் கதைகள் பிற சொற்கள், பிறமொழிப் பெயர்கள் கலவாத நடையில் எழுதப்பட வேண்டும்.

2.கதையின் இரண்டு படிகளை அனுப்ப வேண்டும். ஒரு படியில் மட்டும் பெயர்,முகவரிகளைத் தனித்தாளில் இணைத்து அனுப்புக. கதையின் எந்தப் பக்கத்திலும் எழுதியவர் பெயர் இருக்கக் கூடாது.

3.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல் ஏற்கப்படா.

4.தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் “ வெல்லும் தூய தமிழ்” மாத இதழில் வெளியிடப்படும்.

5.நடுவர் தீர்ப்பே இறுதியானது.

6.சிறுகதைப் படைப்பாளர் உறுதி மொழி இணைக்கப்பட வேண்டும்.

பொறிஞர். இரா. தேவதாசு இவ்வாண்டு பரிசுகள் வழங்குகிறார்.

இரண்டு முதற் பரிசுகள் 750.00 = 1500.00

இரண்டு இரண்டாம் பரிசுகள் 500.00 = 1000.00

இரண்டு மூன்றாம் பரிசுகள் 250.00 = 500.00

அறிவிப்பு: க.தமிழ் மல்லன்

தலைவர், தனித்தமிழ் இயக்கம்.

 
Leave a comment

Posted by on 16/07/2015 in Uncategorized