RSS

Monthly Archives: May 2016

யூ ரியூப்பில் நம் நிகழ்வு

நாம் எதுவும் கேட்காமலே Dr. ரவி அவர்கள் இந் நிகழ்வை ஒலிஒளிப்பதிவு செய்து இணைய வெளியில் என்றென்றைக்குமாக சேகரித்து வைத்திருக்கிறார்.

அந்தப் பெறுமதி மிக்க பேச்சுக்கும் நம்முடய நிகழ்வுக்கும் கிடைத்த ஒரு சிறந்த ஓர் அங்கீகாரமாக இதனை நாம் கொண்டாடுகிறோம்.

மிக்க நன்றி Dr.ரவி.

 
Leave a comment

Posted by on 31/05/2016 in Uncategorized

 

பாராட்டு வைபவம் – தமிழ் முரசு அவுஸ்திரேலியாவில்

30 May 2016

ஞானம் ஆசிரியருக்கு சிட்னியில் பாராட்டு விழா

.
இன்று  (29 05 2016 ) “ஞானம்” இலக்கிய  இதழின் ஆசிரியர் திரு ஞானசேகரன்  அவர்களுக்கு சிட்னியில் பாராட்டு விழா.

u1

கடந்த 16 வருடங்களாக மாதம் தவறாது “ஞானம்” என்றொரு சஞ்சிகையை நடாத்திக் கொண்டிருக்கும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ”போர்க்கால இலக்கியம்”,”புலம்பெயர்ந்தோர் இலக்கியம்” என்ற இரு பெரும் தொகுதிகளை வெளியிட்டவருமான திரு. ஞானம். ஞானசேகரன் அவர்களின் 75வது அகவையைக் கொண்டாடும் முகமாக உயர்திணை அமைப்பினர் இன்று சிட்னியில் பாராட்டு விழா ஒன்றினை நடாத்தியிருந்தார்கள்.

u4

u2

இவ் விழாவில் அவரைப் பாராட்டியதோடு  அவரிடம் இருந்து பல அனுபவத் தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்கள் . “ஈழத்து இலக்கிய மரபின் இன்றய நிலை” பற்றி 45 நிமிடங்கள்  அவரது பேச்சு அமைந்திருந்தது . அதனைத் தொடர்ந்து கருத்து பரிமாறல்களும்  இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து தேநீர் சிற்றுண்டியோடு ஈழத்திற்கே தனித்துவமான கலை வடிவமாகக் காணப்படும் கூத்து மரபில் வெளிவந்த “இராவணேசன்” நாட்டுக் கூத்து ஒளிப்படக்காட்சி காண்பிக்கப்பட்டது . அது ஈழத்தின் கிழக்கு மாகாணத்துப் நுண்கலைப் பீட பேராசிரியர் மெளனகுரு அவர்களால் நெறியாழ்கை செய்யப்பட்டு பலரின் பாராட்டைப் பெற்ற கூத்து வடிவமாகும்.

u5

u6

நிகழ்ச்சியை கலாநிதி.மகேந்திரராஜா.பிரவீனன் தொகுத்து வழங்கினார். மங்கல விளக்கு திரு.திருமதி.ஈழலிங்கம் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது.ஞானம் ஆசிரியரை கலாநிதி ஆ சி கந்தராசா பாராட்டுரை வழங்கி கௌரவித்தார் .      உயர் திணையின் பொறுப்பாளர் யசோதா பத்மநாதனும் , இலக்கிய பேச்சாளர்  திரு தனபாலசிங்கம் அவர்களும் விருது வழங்கி கௌரவித்தார்கள். வரவேற்புரையை நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் வழங்க நன்றி உரையை கீதா மதிவாணன் வழங்கினார்.
மண்டபம் நிறைந்த மக்களோடு பாராட்டு வைபவம் நிறைவடைந்தது.

u7

u8

u9

u10

u11

u12

u13

u14

u16

u3

u17

தமிழ்முரசு அவுஸ்திரேலியா இணையப் பத்திரிகைக்கு நம் உளமார்ந்த நன்றிகள்.

http://www.tamilmurasuaustralia.com/2016/05/blog-post_3.html#more

 

 
Leave a comment

Posted by on 30/05/2016 in Uncategorized

 

நிகழ்ச்சி நிரல்

      uyarthinai - logo

                  பாராட்டு வைபவமும் கருத்துப் பகிர்வும்   

                    (29.05.2016, ஞாயிறு மாலை 3.00 – 6.00)

நிகழ்ச்சி நடத்துனர்: கலாநிதி.மகேந்திரராஜா.பிரவீனன்.

நிகழ்ச்சி நிரல்:

*  மங்கல விளக்கேற்றல்: திரு.திருமதி.ஈழலிங்கம் அவர்கள்

*  தேசியகீதமும் தமிழ்தாய் வாழ்த்தும்:செல்விகள்.லக்‌ஷினி.லோகேஸ்வரன்,                  கேசினி.கேதீசன்

*  அவுஸ்திரேலிய மூதாதையர் நினைவு கூரலும் அகவணக்கமும் –   (10.நிமி.)

*  வரவேற்புரை: நாட்டியக் கலாநிதி. கார்த்திகா.கணேசர். (10 நிமி)

*  பாராட்டுரை: பேராசிரியர். ஆசி.கந்தராஜா (10 நிமி)

*  விருது வழங்கல்: வழங்குபவர் ‘குறுமுனி’ தனபாலசிங்கம் ஐயா.

*  கருத்துப் பகிர்வு: ‘ஞானம்’ ஞானசேகரன்

“ஈழத்து இலக்கிய மரபின் இன்றய நிலை”  (45 நிமி)

*  கலந்துரையாடல்: (20 நிமி)

*  நன்றியுரை: திருமதி. கீதமஞ்சரி.மதிவாணன். (5 நிமி)

இடைவேளை; (10 நிமி)

* அறிமுகம்: ’இராவணேசன்’ –  நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்.

*  ஒளிப்படம்: இராவணேசன் (30நிமி)

நிறைவு

புகைப்பட உதவி: திரு.செ.பாஸ்கரன்       ஒலிஒளிப்பட உதவி:கானா.பிரபா.

 
Leave a comment

Posted by on 25/05/2016 in Uncategorized

 

இலக்கியச் சந்திப்பு – 25

இலக்கிய சந்திப்பு - 25

வணக்கம் இலக்கிய உள்ளங்களே!

எல்லோரும் நலம் தானா?

பல மாதங்கள் வெறுமனே கடந்து போயின…புலம்பெயர்ந்த நாடுகளில் வேலையும் வாழ்க்கையும் நம் எல்லோரையும் ஓடிக்கொண்டே இருக்கப் பண்ணியதில் பல மாதங்கள் நம் சந்திப்புக்களை நிகழ்த்த முடியாமல் போய் விட்டது.

இருந்த போதும் பல இலக்கிய நிகழ்ச்சிகளும் கலை பண்பாட்டு நிகழ்வுகளும் வாராந்த மாதாந்த கூட்டங்களும் சிறப்பாக இங்கு நடந்த வண்ணமே உள்ளன. அவைகள் நம்மை உயிர்ப்போடு வைத்திருப்பதிலும் புளகாங்கிதம் அடைய வைப்பதிலும் தம் பங்கினை செவ்வனே ஆற்றியும் வருகின்றன. அங்கு நாம் சந்திக்கிற அன்பர்கள் எப்போது அடுத்த சந்திப்பு எனக் கேட்ட வண்ணமாகவே இருந்தனர்.நீங்கள் எல்லோரும் நம்மோடு பக்க பலமாக இருக்கிறீர்கள் என்பதை அப்போதெல்லாம் அறிந்து மகிழ்ந்தோம்.

இத்தோடு அண்மையில் ஈழத்தில் இருந்து இங்கு விஜயம் செய்திருக்கும் கடந்த 16 வருடங்களாக மாதம் தவறாது “ஞானம்” என்றொரு சஞ்சிகையை நடாத்திக் கொண்டிருக்கும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ”போர்க்கால இலக்கியம்”,”புலம்பெயர்ந்தோர் இலக்கியம்” என்ற இரு பெரும் தொகுதிகளை வெளியிட்டவருமான திரு. ஞானம். ஞானசேகரன் அவர்கள் அவரது 75வது அகவையைக் கொண்டாடும் முகமாக இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.

அவரைச் சிறப்பிப்பதோடு அவரிடம் இருந்து பல அனுபவத் தகவல்களையும் அறிந்து கொள்ளும் முகமாக ஒரு சந்திப்பினை ஏற்பாடு செய்திருக்கிறோம். “ஈழத்து இலக்கிய மரபின் இன்றய நிலை” என்பது சம்பந்தமாக அவரது பேச்சு அமைந்திருக்கும். அதனைத் தொடர்ந்து கருத்துக்களுக்கும் அனுபவப்பகிர்வுகளுக்கும் தக்க களமும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஈழத்து இலக்கிய மரபும் அது காலா காலங்களில் எவ்வாறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது என்பதும் இன்றய கால கட்டத்தில் அது எவ்வாறான போக்குகளைக் கொண்டிருக்கிறது என்பதும் ஈழத்து இலக்கியம் சம்பந்தமாக ஒரு ஒரு சிறந்த பார்வையை அது நமக்குத் தரும் என்பதும் நமது நம்பிக்கை.

அதனைத் தொடர்ந்து தேநீர் சிற்றுண்டியோடு ஈழத்திற்கே தனித்துவமான கலை வடிவமாகக் காணப்படும் கூத்து மரபில் வெளிவந்த “இராவணேசன்” நாட்டுக் கூத்து ஒளிப்படக்காட்சி காண்பிக்கப் படும். அது ஈழத்தின் கிழக்கு மாகாணத்துப் நுண்கலைப் பீட பேராசிரியர் மெளனகுரு அவர்களால் நெறியாழ்கை செய்யப்பட்டு பலரின் பாராட்டைப் பெற்ற கூத்து வடிவமாகும்.

இந் நிகழ்வு சிறப்புற உங்கள் வரவை வேண்டி நிற்கிறோம்.

இந் நிகழ்வின் ஊடாக ஈழத்து இலக்கிய மரபு பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டமும் நமக்கே நமக்கான கலை வடிவமான கூத்தின் பாரம்பரிய சிறப்பினையும் கண்டு நம் பண்பாட்டின் வேர் பற்றிய தெளிவோடும் பயனோடும் நாம் இந் நிகழ்வினை நிறைவு செய்வோம் என்பது நம் நம்பிக்கை.

எல்லோரும் வாருங்கள்.

நடை பெறும் இடம்:Mayura Function and Event Center,
54 – 47, Boomereng Place, SEVEN HILLS – 2147
( புகையிரத நிலையத்திற்கு முன்பாக)

காலம்: மாதாந்த இறுதி ஞாயிறான 29.05.2016

நேரம்: 3.00 – 6.00 (நிகழ்வு சரியான நேரத்திற்கு ஆரம்பமாகி சரியான நேரத்திற்கு நிறைவு பெறும்)

உங்கள் எல்லோரது வரவையும் ஆவலோடு எதிர் பார்த்திருக்கிறோம்.

நன்றி.

 
Leave a comment

Posted by on 14/05/2016 in Uncategorized