RSS

3.7.16 நிகழ்வுகள்

03 Jul

இன்றய தினம் நிகழ்வுக்கு வந்திருந்தோர் திருவாட்டிகள். யசோதா.பத்மநாதன், கீதா. மதிவாணன், பானு.ரவி மற்றும் திருவாளர்கள்.ரஞ்சகுமார், ரவி ஆகியோர்.

நிகழ்வு, நிகழ்வு ஒன்று நடாத்துவதில் உள்ள சாத்தியங்கள் அசாத்தியங்கள் குறித்தும்; தாயகத்தில் நடத்தப்படும் விழாக்களுக்கும் இங்கு நிகழ்த்தப்படும் நிகழ்வுகளுக்கும் இடையே காணப்படும் அடிப்படை வேறுபாடுகள் குறித்தும்; இந்தியாவையும் இலங்கையையும் சிட்னியையும் மையமாகக் கொண்ட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

இருந்த போதும் நம்மால் நிகழ்த்தப்பட்ட பாராட்டு வைபவம் வரவேற்கப்பட வேண்டியதொன்று என்ற கருத்தும் அதனை மகேந்திரராஜா. பிரவீனன் சிறப்பாகச் நடாத்தியிருந்தார் என்பதும் தொடர்ந்து இது மாதிரியாக மாத்திரமல்லாமல் மாதாந்த சந்திப்புகளில் பேச்சாளர் ஒருவரை ஒரு விடயம் குறித்த களத்துக்கு அழைத்து அவரை அப்பொருள் குறித்து பேச வைக்க வேண்டும் என்றும் குறைந்தது மூன்று மாதத்திற்கொரு முறையேனும்  நம்மிடையே மலர்ந்தும் மலாராமல் இருக்கும் புத்தகங்கள் குறித்த வெளியீட்டு விழாக்கள் மற்ரும் சற்ரே பெரிய பொது மக்கள் பலரையும் அழைக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் கருத்துக்கள் ஏக மனதாக முன்வைக்கப்பட்டன.

அதன் நடைமுறைச் சிக்கல்கள் அவற்றைத் தொடர்ந்து செய்வதன் மூலமாகவே களையப்படக்கூடும் என்றும் அதன் ஒரு கூறாக இவ் அமைப்பை அரசில் பதிவு செய்வது சிறந்த ஒரு தொடக்கமாக இருக்கும் என்றும் அவ்வாறு பதிவு செய்வதன் மூலமாக பண உதவிகளை நிறுவனங்களில் பெறுவதற்கு அரச விதி விலக்குகளை நிறுவனங்கள் பெற்றுக் கொள்ளும் என்றும்  கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

அத்தோடு இன்னும் குறைந்தது 3 மாத இடைவெளியில் நம்மவர்களால் புத்தகமாக வெளிக்கொணரப்பட்ட கீதா.மதிவாணனின் ‘என்றாவது ஒரு நாள்’ மகேந்ந்திரராஜா. பிரவீணனின் ’ஏலியன் கதைகள்’,ஆழியாழின் ‘கருநாவு’ கவிதைத் தொகுதி, கார்த்திகா. கணேசரின் ’காலந்தோறும் நாட்டியக் கலை’ஜே.கே.யின் ’கொல்லைப்புறத்துக் காதலிகள்’ ஆகிய புத்தகங்கள் வேளியீட்டு விழாவுக்கான திகதியை எதிர் நோக்கிக் காத்திருக்கின்றன என்றும் அன்றய நிகழ்வை  நிர்வகித்து நடத்தும் பொறுப்பை எழுத்தாளர் ரஞ்சகுமார் அவர்கள் ஏற்றுக் கொண்டு செய்வதாகவும் தீர்மானிக்கப் பட்டது. அது தனித்துவமானதாகவும் கச்சிதமானதாகவும் நேரத்திற்கு உட்பட்டதாகவும் இருக்கவேண்டும் என்ற கருத்து எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அத்தோடு இந்தியாவில் இருந்து இப்போது சிட்னிக்கு விஜயம் செய்திருக்கும் கவிஞர் சல்மா அவர்களை இம்மாத சந்திப்பிற்கு பிரதம அதிதியாக அழைப்பதற்கு ஆவன செய்வதாக திரு. ரஞ்சகுமார் அவர்கள் தெரிவித்தார்கள். நாம் பரந்து பட்ட தலைப்புகளை எடுக்க வேண்டிய தேவைகள் குறித்தும்; இந்தியத் தமிழ் மக்களை இணைப்பது குறித்தும் பேசப்பட்ட கருத்துக்கள் ஆலோசனைகள் அனைவராலும் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பலரும் சமூகமளிக்காத காரணத்தால் நிர்வாகக் குழு தெரிவு செய்யப்படவில்லை.

தமிழ் அறிவகத்தில் காணப்படும் பல அரிய புத்தகங்கள் அதன் அமைவு ஆகியன குறித்த ஆச்சரியங்களோடும்; சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும் கேட்போர் கூடத்தின் வசதி குறித்த சந்தோஷத்தோடும்; எதிர்கால நிகழ்ச்சிகள் குறித்த நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகளோடும் நிகழ்ச்சி சரியாக 6.00 மணிக்கு நிறைவுக்கு வந்தது.

தமிழால் இணைந்திருப்போம்.

அன்புடன்

யசோதா.பத்மநாதன்

(அமைப்பாளர், ’உயர்திணை’)

 

Advertisements
 
Leave a comment

Posted by on 03/07/2016 in Uncategorized

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: