வருகிற வியாழக்கிழமை 26.1.17 அன்று மாலை யாழ்நிகழ்வரங்கில் கீதா.மதிவாணனின் ‘என்றாவது ஒரு நாள்’ – அவுஸ்திரேலிய செவ்வியல் எழுத்தாளரான ஹென்றி லோஷனின் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியிட்டு வைக்கப் பட இருப்பது நீங்கள் அறிந்ததே!
இன்று 22.1.17 இரவு 8.00 – 9.00 மணி வரை நடைபெறும் SBS அரச ஊடக வானொலியில் (சுமார் 73 மொழிகளில் ஒலிபரப்பு நடைபெறுகிறது) கீதாவின் ‘என்றாவது ஒரு நாள்’ புத்தகத்தில் வந்த ‘சீனத்தவனின் ஆவி’ என்ற சிறுகதை ஒலிவாகனம் ஏறி கலை வலம் வந்தது.
அவ் ஒலி வடிவத்தை நீங்களும் கீழ்வரும் இணைப்பில் சென்று கேட்கலாம்.
கதை வடிவம்: கீதா.மதிவாணன்.
ஒலிவடிவம்: பாலசிங்கம். பிரபாகரன்.
நிகழ்ச்சித் தயாரிப்பு: றேனுகா.துரைசிங்கம்
நிகழ்ச்சி மேலாளர்: ரேமண்ட். செல்வராஜ் (றைசெல்)
ஒலிவாகனம் ஏறி அகிலமெல்லாம் ‘கலைவலம்’ செய்ய வைத்த கலைஞ உள்ளங்கள் அனைவருக்கும் நம் மனம் நெகிழ்வான நன்றிகளைச் சொரிந்து மகிழ்கிறோம்………
http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/ciinnnttvnnninnn-aavi?language=ta