கவிஞர். செ. பாஸ்கரன்
பழகிய ஆண்டு விடைபெறும் போது
மனதினில் ஆயிரம் நினைவுகள் வந்தன.
புதிய ஆண்டினில் புகும் இந் நேரம்
ஆயிரம் கனவுகள் எழுந்து முன் வந்தன.
கனவுகள் யாவும் நிஜமென மாற்றி
இனிய வாழ்வினை அனைவரும் பெறுவோம்.
புதிய கவிதைகள் ஆயிரம் படைப்போம்.
உயர்திணைக் கவியென
உலகினில் பறப்போம்.
அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்.
அன்புடன் செ.பாஸ்கரன்.
………………………………………………….
கவிஞர். ஆறு.குமாரசெல்வம்
அன்பும் பண்பும் மலரட்டும்
ஆசையும் கோபமும் உலரட்டும்
இனிமையே நாவில் தவழட்டும்
ஈகை எண்னம் கமழட்டும்
உண்மை என்றும் நிலைக்கட்டும்
ஊழல் சிந்தனை தொலையட்டும்
எங்கும் கருணையே பரவட்டும்
ஏற்றமுடன் மானிடர் உயரட்டும்
ஐயம் மனதினில் அழியட்டும்
ஒற்றுமை உணர்வே விளையட்டும்
ஓயாது மானிடம் உழைக்கட்டும்
அஃதே நன்றென திளைக்கட்டும்!
இனிதே மலர்ந்தது
புத்தாண்டு Twent – Twenty
இன்பமும் மகிழ்வும்
இணைந்தே தரும்
என்றும் வெற்றி! வெற்றி!
’உயர்திணை’
உயர்ந்தோர் சிந்தனைக் கருவூலம்
’அயர்வினை’
அகற்றும் அன்பாளர்
இணைப்புப் பாலம்.
மகிழ்வுடன்,
ஆறு.குமாரசெல்வம்.
( வாழ்த்திய கவி/ கருணை உள்ளங்களை வணங்குகிறேன்.வந்ததோர் 2020ஆண்டில் வாழ்த்தி மனம் மகிழ்கிறேன்)
…………………………………………………………….
கவிஞர். நந்திவர்மன்.
இருபது பிறந்திட
வருவது சிறந்திட
இன்பம் நிறைந்திட
துன்பம் மறைந்திட
அறிவு பெருகிட
உறவு உருகிட
மகிழ்ச்சி பொங்கிட
புகழ்ச்சி தங்கிட
நலங்கள் சேர்ந்திட
உளங்கள் ஆர்த்திட
ஆழ்ந்த அன்புடன்
வாழ்த்து கின்றனன்.
– த. நந்திவர்மன்.
………………………………………………….
பிறந்திருக்கின்ற இந்தப் புத்தாண்டு அனைவர் வாழ்விலும் அன்பையும் மகிழ்வையும் உடல் நலத்தையும் மன அமைதியையும் தருவதாக!