RSS

Category Archives: அறிவிப்பு

உயர்திணையின் அவுஸ்திரேலியக் கவிஞர்களுக்கான அழைப்பு

அன்புடையீர்,

அவுஸ்திரேலியாவில் பல காத்திரமான கவிஞர்கள் இருக்கிறார்கள். சிலர் ஆசு கவிகள்! நினைத்தவுடனே கவி படைக்க வல்லோர். மேலும் சிலர் மரபுக் கவிஞர். வரம்புக்குள் நின்று வசீகரமாகக் கவிதர வல்லோர்! மேலும் சிலர் வீச்சு வாள் போலும் வார்த்தைகளை சுழல விட்டு சொற்போர் செய்ய வல்லார்! இவைகள் எல்லாம் கைக்கொள்ள வல்லாரும் நம்முள்ளே உளர்.
எனினும் அவர்களை ஒருங்கிணைத்து கவி இன்பம் பெற வாய்ப்புகள் நமக்குள்ளே அதிகம் இல்லை. வாழ்க்கையும் வேலையும் போட்டி போடும் உலகில் சுந்தரத்தமிழில் சிந்துக் கவி இயற்றவும் அதனை இயக்கவும் ஓர் உந்து சக்தி தேவையாகவே இருக்கிறது. ஏனைய கலைவெளிகளுக்கு வேண்டப்படுவது போலவே!

தவிரவும், அவுஸ்திரேலியச் சமூகம் நோக்கியதான கவிஞர்களின் சிந்தனைகளும் அவர்களின் கவிதா விசாலங்களும் கூட பெருமளவு ஆவணப்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது.

அதன் காரணமாக, வருகிற 2020 புதுவருடத்திலிருந்து உயர்திணையின் செயல்பாடுகளின் ஒரு முன்னோட்டமாக அவுஸ்திரேலியத் தமிழ் கவிஞர்களை ஒன்றிணைத்து மாதம் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கவிதைகளைக் கோருவதெனவும்; அவைகள் யாவும் வந்து சேர்ந்த காலக் கிரமத்தின் படி அடுத்த மாத ஆரம்பத்தில் திகதிவாரியாக உயர்திணை வலைப்பக்கத்தில் பிரசுரிப்பதெனவும் உயர்திணை நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது.

அதன் ஒரு முன்னூட்டமாகக் கடந்த மாதத்திற்கான தலைப்பாக, அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் முழுக்க பெரும் தாக்கத்தைச் செலுத்திய; செலுத்திக்கொண்டிருக்கும் ”காட்டுத் தீ” என்ற தலைப்பு தெரிவு செய்யப் பட்டிருந்தது.

இம்மாதம் “அகதிப்படகு” என் ற தலைப்பு கவிதைக்குரிய கருப்பொருளாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. அவுஸ்திரேலியாவில் மாத்திரமன்றி உலகம் முழுவதிலும் பேசப்படும் ஒரு பிரச்சினைப் பொருளாக இவ் விடயம் ஆகியிருக்கிற பின்னணியில் கவிஞர்களாகிய உங்கள் எண்ணங்களும் சிந்தனைகளும் கவிதா பதிவுகளும் எவ்வாறு இருக்கிறதென்பதை அறிய ஆவலோடிருக்கிறோம்.

அவுஸ்திரேலியக் கவிஞர்களுக்கு மாத்திரமான இத்தலைப்புக்குரிய கவிதைகள் யாவும் இம்மாத இறுதி 31.12.19 இக்கிடையில் uyarthinai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கவிதைகளை எழுதி அனுப்புமாறு கோருகிறோம்.

அனுப்பப்படும் சகல கவிதைகளும் அடுத்த மாத முதல் வாரத்திற்குள் வந்துசேர்ந்த திகதிவாரியாக https://uyarthinai.wordpress.com/ என்ற இணையப்பக்கத்தில் பிரசுரமாகும்.

எதிர்காலத்தில் சிறப்பானதாகவும், சமூகம் சார்ந்த விடயங்களைக் கொண்டதாகவும் விளங்கும் கவிதைகள் தக்க நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்டு, அக்கவிதைகளுக்கான கவிஞர்களின் அனுமதியோடும் அவர்களது பெயர்களோடும் உயர்திணை வெளியீடாக புத்தகமாக வெளிக்கொணரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அவுஸ். கவிஞர்களுக்கான அழைப்பு

91v6K4iksxL._SY450_

அவுஸ்திரேலியாவில் பல காத்திரமான கவிஞர்கள் இருக்கிறார்கள். சிலர் ஆசு கவிகள்! நினைத்தவுடனே கவி படைக்க வல்லோர். மேலும் சிலர் மரபுக் கவிஞர். வரம்புக்குள் நின்று வசீகரமாகக் கவிதர வல்லோர்! மேலும் சிலர் வீச்சு வாள் போலும் வார்த்தைகளை சுழல விட்டு சொற்போர் செய்ய வல்லார்! இவைகள் எல்லாம் கைக்கொள்ள வல்லாரும் நம்முள்ளே உளர்.

எனினும் அவர்களை  ஒருங்கிணைத்து கவி இன்பம் பெற வாய்ப்புகள் நமக்குள்ளே அதிகம் இல்லை. வாழ்க்கையும் வேலையும் போட்டி போடும் உலகில் சுந்தரத்தமிழில் சிந்துக் கவி இயற்றவும் அதனை இயக்கவும் ஓர் உந்து சக்தி தேவையாகவே இருக்கிறது. ஏனைய கலைவெளிகளுக்கு வேண்டப்படுவது போலவே!

தவிரவும், அவுஸ்திரேலியச் சமூகம் நோக்கியதான கவிஞர்களின் சிந்தனைகளும் அவர்களின் கவிதா விசாலங்களும் கூட பெருமளவு ஆவணப்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது.

அதன் காரணமாக, வருகிற 2020 புதுவருடத்திலிருந்து உயர்திணையின் செயல்பாடுகளின் ஒரு முன்னோட்டமாக அவுஸ்திரேலியத் தமிழ் கவிஞர்களை ஒன்றிணைத்து மாதம் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கவிதைகளைக் கோருவதெனவும்; அவைகள் யாவும் வந்து சேர்ந்த காலக் கிரமத்தின் படி அடுத்த மாத ஆரம்பத்தில் திகதிவாரியாக இந்த உயர்திணை வலைப்பக்கத்தில் பிரசுரிப்பதெனவும் உயர்திணை நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது.

அதன் ஒரு முன்னூட்டமாக மார்கழி மாதத்திற்கான தலைப்பாக, அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் முழுக்க பெரும் தாக்கத்தைச் செலுத்திய ”காட்டுத் தீ” என்ற தலைப்பு தெரிவு செய்யப் பட்டிருக்கிறது.

அவுஸ்திரேலியாவில் வாழும் கவிஞப் பெருமக்கள் ”காட்டுத் தீ” என்ற தலைப்பில் உங்கள் கவிதைகளை எழுதி, உங்களைப் பற்றிய புகைப்படத்தோடு கூடிய குறிப்பினையும் இணைத்து uyarthinai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கவிதைகளை எழுதி அனுப்புமாறு கோருகிறோம்.

அவுஸ்திரேலியாவில் வாழும் கவிஞர்களுக்கு மட்டுமான இந்த கூட்டுக் கவிதைகள் அவுஸ்திரேலிய பொது சமூகத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கும் அதே வேளை தெரிவு செய்யப்படும் கவிதைக்கான தலைப்புகள் அவுஸ்திரேலிய தமிழர், பண்பாடு, மொழி, மரபுரிமை, வாழ்வியல், சூழலியல் சார்ந்ததாகவும் பொது சமூகத்தோடு ஒத்திசைவானதாகவும் இருக்கும்.

அனுப்பப்படும் சகல கவிதைகளும் அடுத்த மாத முதல் வாரத்திற்குள் பிரசுரமாகும்.

எதிர்காலத்தில் சிறப்பானதாகவும், சமூகம் சார்ந்த விடயங்களைக் கொண்டதாகவும் விளங்கும் கவிதைகள்  தக்க நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்டு, அக்கவிதைகளுக்கான கவிஞர்களின் அனுமதியோடும் அவர்களது பெயர்களோடும்  உயர்திணை வெளியீடாக புத்தகமாக வெளிக்கொணரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மார்கழி மாதத்துக்கான கவிதைத் தலைப்பு: “காட்டுத் தீ”

கவிதைகள் வந்து சேரவேண்டிய மின்னஞ்சல் முகவரி: uyarthinai@gmail.com

அடுத்த மாதத்துக்கான கவிதைகள் தங்களைப்பற்றிய  தகவல்களோடு  வந்து சேர வேண்டிய

முடிவு திகதி: 30.11.19.